About us

நவீன வகையிலான ஊடகதுறை மற்றும் தொழில் அடிப்படை கற்கைநெறி முதன் முறையாக இலங்கையில் அறிமுகப்படுத்தப்படுகின்றது.

இலங்கையில் விரைவில் நவீன செயற்பாடுகளுடன் ஊடக கற்கை நெறி ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது

ஊடகத்துறைக்கு மாத்திரமன்றி எந்த தொழிலுக்கும் ஏற்ற வகையில் ஆங்கில, சிங்கள மொழியறிவை விருத்தி செய்து அதன் மூலம் தொழில் வாழ்க்கையை வெற்றிக்கொள்ளும் வகையிலும் நம்பிக்கையினை மேம்படுத்தும் முறைமையிலும் இந்த பாடநெறிக்கான பாடதிட்டங்கள் நிபுணர்களால் தயாரிக்கப்பட்டுள்ளன.

குறுகிய மூன்று மாத காலப்பகுதியினை மாத்திரம் கொண்டுள்ள வகையில் இந்த பாடநெறிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

சூரியன் எப் எம் செய்திப்பிரிவு முகாமையாளர் எம் இந்திரஜித் நெறிப்படுத்தலில் விரைவில் இந்த கற்கை நெறி ஆரம்பிக்கப்படவுள்ளது.

மாவட்ட ரீதியாக வதிவிட வகுப்புக்களாகவும் இணையத்தளம் மற்றும் அஞ்சல் மூல தொலைக்கல்வி கற்கையாகவும் இந்த கற்கை நெறி முன்னெடுக்கப்படவுள்ளது.

அனைவரும் பயன்பெறவேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்டு இலகுவாக செலுத்தக் கூடிய குறைந்த கட்டண அடிப்படையில் இந்த பாடநெறி நடத்தப்படவுள்ளது. இது தவிர வானெலி மற்றும் தொலைக்காட்சிகளில் அறிவிப்பாளராக பணியாற்ற விரும்பும் இளைஞர் யுவதிகளுக்கு அந்த துறைகளில் பணியாற்றும் புகழ்பெற்றவர்களின் நேரடி விரிவுரைகளும் விசேட பயிற்சிகளும் வழங்கப்படும். இந்த பயிற்றுவிப்பாளர்களினால் பயிற்றப்பட்ட பலர் இலங்கையிலும், சர்வதேச ரீதியாக தொழில்படும் பல வானொலி மற்றும் தொலைக்காட்சி நிலையங்களில் பணியாற்றுகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பாடநெறியில் இணைந்து பயன்பெறவிரும்புவோர் 0773124313, 0772268874, 0772268873, 0772288828, 0772288829, 0715943415 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை பெற முடியும்.